Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக, அதிமுக இடையே எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம்: முத்தரசன் விளக்கம்

Webdunia
புதன், 4 மே 2016 (15:34 IST)
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்வது, இரு கட்சிகள் இடையே எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.


 
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ஈரோட்டில் அளித்த பேட்டி ஒன்றில்,
கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்புகள் வெளியாகி வருவதாகவும், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் தங்களுக்கு சார்பாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் கூறினார்.
 
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஊழல் செய்வது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் தான் என்ற அவர் இந்த இரு கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்வது, இரு கட்சிகள் இடையே எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் என்றும், கருத்துக்கணிப்பு வெளியிட்ட ஊடகங்கள் தங்களின் விருப்பத்தை வெளியிட்டுள்ளது, அது மக்களின் விருப்பம் அல்ல, என்று முத்தரசன் கூறினார்.
 
மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்காக இடதுசாரி கட்சிகளின் தேசிய தலைவர்களான சுதாகர் ரெட்டி, ராஜா, சீத்தராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் வர உள்ளதக முத்தரசன் கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments