Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போட்டியிட ஆள் இல்லை : காற்று வாங்கும் தேமுதிக கூடாரம்

போட்டியிட ஆள் இல்லை : காற்று வாங்கும் தேமுதிக கூடாரம்

போட்டியிட ஆள்  இல்லை : காற்று வாங்கும் தேமுதிக கூடாரம்
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (13:08 IST)
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கூட ஆட்கள் கிடைக்காமல் தேமுதிக திணறி வருகிறது.
 

 
நடந்து முடிந்த 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியாக விஜயகாந்த் அவர்களின் ‘தேமுதிக’ இருந்தது. காரணம் 2011 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.
 
முடிவில் 29 தொகுதிகளை கைப்பற்றியதோடு 7.9% வாக்குகளை பெற்று தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி அந்தஸ்து பெற்றது. மேலும், எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றதால் 2016 தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி வைக்க அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டிருந்தன.
 
ஆனால், விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டார். முடிவில் 104 போட்டிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. அதன் தலைவர் விஜயகாந்த் கூட அவர் போட்டியிட்ட தொகுதியில் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
 
இதனால் தேமுதிகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். மேலும், தேமுதிக இதுவரை கூட்டணி குறித்தும் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
 
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக நிர்வாகிகளே அஞ்சுவதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேர்தலுக்கு செலவு செய்தாலும் டெபாசிட் கிடைப்பதே கடினம் என்று கருதுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் சேட்டையை தொடங்கிய ஓலா டாக்ஸி: இளம்பெண் பாலியல் வன்கொடுமை