மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சிலை வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்ற நிலையில் தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது கேப்டனின் இரண்டு கண்கள் எப்படி இருக்கின்றதோ,அது போல் தான் கேப்டன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்
எந்த நோக்கத்திற்காக தேமுதிக கட்சி தொடங்கப்பட்டது அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சென்னை மெரினாவில் கருணாநிதியின் பேனா சிலை வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என்று தமிழக அரசுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா யோசனை தெரிவித்தார்
மேலும் எழுதாத பேனாவிற்காக 80 கோடி ரூபாய் மதிப்பில் சிலை வைப்பதற்கு பதிலாக மக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி களை செய்யலாம் என்றும் ஆனால் இப்போது தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்