Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ.

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (06:17 IST)
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. பாபு முருகவேலை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதன் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


 

தேமுதிகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக இருந்து வந்தவர் பாபு முருகவேல். இவர், கடந்த தேர்தலில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பாபு முருகவேல் நேற்று முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து கழகத்தின் கட்டுபாட்டை மீறியதாகவும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி கழக பதவியில் இருந்து நீக்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மேலும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக தெரிவத்துள்ளார். இவருக்கு பதிலாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக கோபிநாதன் என்பவரை நியமித்துள்ளார்.

கோபிநாதன் தெள்ளார் ஒன்றிய கழக செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments