Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடைத்தேர்தலுக்கு தயாராகிவிட்ட விஜயகாந்த் - வேட்பாளர்கள் அறிவிப்பு

இடைத்தேர்தலுக்கு தயாராகிவிட்ட விஜயகாந்த்  - வேட்பாளர்கள் அறிவிப்பு
, ஞாயிறு, 30 அக்டோபர் 2016 (15:39 IST)
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார்.
 

 
நடந்து முடிந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பிரச்சனைகளால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.
 
அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததை அடுத்து 3 தொகுதிகளும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக உள்ளன.
 
காலியாக உள்ள இந்த மூன்று தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். தலைமை தேர்தல் ஆணையம் நடத்தை விதிப்படி இந்த 3 தொகுதிகளிலும் வரும் நவம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.
 
இந்நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
 
அதன்படி மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை [26-10-16] தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் நவம்பர் 2ஆம் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 5ஆம் தேதி ஆகும்.
 
இந்நிலையில், 3 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ள தேமுதிக, அதற்கான வேட்பாளர் பெயர் பட்டியலை, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ளார்.
 
அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் அரவை எம். முத்துவும், திருப்பரங்குன்றம் தொகுதியில் தனபாண்டியன், தஞ்சாவூர் தொகுதியில் அப்துல்லா சேட் ஆகியோர் தேமுதிக சார்பில் போட்டியிடுகின்றனர் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க பிரச்சாரம்: கலக்கத்தில் தி.மு.க