Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க தேமுதிக வலியுறுத்தல்- சுதீஸ் தகவல்

sudhesh, premalatha vijayakanth-family
, சனி, 30 டிசம்பர் 2023 (18:05 IST)
‘'விஜயகாந்த் நினைவிடத்தில்  இன்று முதல் ஜனவரி 1 ஆம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்லி செலுத்த அனுமதி அளிக்கப்படுவதாக’' தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமாவுக்கும், அரசியலுக்கும் பேரிழப்பு என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

நேற்று  விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்த், ‘’தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கு அரசு மரியாதைக்கு நல்ல முறையில் ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி எனவும், நினைவிடத்தில் 24 மணி நேரமும் பூஜைகள் செய்யப்படும் ’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘'விஜயகாந்த் நினைவிடத்தில்  இன்று முதல் ஜனவரி 1 ஆம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்லி செலுத்த அனுமதி அளிக்கப்படுவதாக’' தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஸ் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் கூறியதாவது: ‘’நடிகர் சங்கக் கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் விஜயகாந்த் சிலை வைப்பதற்கு தமிழக அரசிடம்  கடிதம் கொடுக்க உள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை கோவில்களில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்: நடை திறக்கப்படும் நேரம் அறிவிப்பு..!