Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 தொகுதின்னு சொன்னீங்களே!.. தேமுதிக கேட்கும் 3 தொகுதியில் இழுபறி!..

Advertiesment
premalatha
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அடுத்து தேமுதிகவுக்குதான் அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில் தேமுதிகவுக்கு 10 தகுதிகளை ஒதுக்கி இருக்கிறது திமுக. இத்தனைக்கும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மதிமுக போன்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மிகவும் குறைவான தொகுதிகளை கொடுத்துவிட்டு தேர்முதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்திருப்பதோடு ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுத்திருக்கிறது திமுக.

இது எதற்காக என்று யாருக்கும் புரியவில்லை. இத்தனைக்கும் தற்போது தேமுதிகவுக்கான வாக்கு வங்கி என்பது ஒரு சதவீதத்தை விட குறைவாக இருக்கிறது.. விடுதலைச் சிறுத்தை 10 தொகுதிகள் கேட்டும் திமுக கொடுக்கவில்லை. அந்த கட்சிக்கு 8 தொகுதிகளைத்தான் ஒதுக்கியிருக்கிறார்கள்.

அதோடு கூட்டணி கட்சிகளின் பல தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக சொல்லி வருகிறது. இந்நிலையில்தான், தேமுதிக கேட்கும் 10 தொகுதிகளில் 7 தொகுதிகளை கொடுத்துவிட்டாலும் 3 தொகுதிகளை கொடுப்பதில் இழுபறி நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது. விருதாச்சலம் தொகுதியை காங்கிரஸும், தேமுதிகவும் கேட்கிறது. அதேபோல், விஜயகாந்த் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ரிஷிவந்தியம் தொகுதியை தற்போது திம்க எம்எல்ஏ கேட்பதால் இழுபறி நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தரை வழி தாக்குதல் நடந்தால் உங்கள் வீரர்கள் காணாமல் போவார்கள்!. அமெரிக்க, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!...