கேவலமா போய்ட்டோமா... கொதிக்கும் தேமுதிக; சமாதான தூது விட்ட அதிமுக!!

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (12:43 IST)
அதிமுக அமைச்சர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பேசியிருப்பது அதிமுக - தேமுதிக இடையே மனஸ்தாபத்தை உருவாக்கியுள்ளது. 
 
நடிகர்களின் அரசியல் வருகை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் சீமான் ஆகியோர் கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் அதிமுகவின் கதர் மற்றும் கிராமத் தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் அதிமுக கூட்டணிக்கே பங்கம் விளிஅவிக்கும் விதமாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். ஆம், சிவகங்கையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார், அது என்ன ஆனது பார்த்தீர்களா? இனி நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அது செல்லுபடி ஆகாது என பேசினார்.
அதிமுக அமைச்சர், கூட்டணியின் இருக்கும் கட்சி தலைவர் குறித்து இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தேமுதிக தரப்பினரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. தேமுதிக தரப்பில் இது குறித்து கொதிப்புடன் அதிமுக தலைமையிடம் பேச்சு நடந்ததாம். 
 
தேமுதிக தரப்பின் கோபத்தை உணர்ந்த அதிமுக தலைமை ஆவர்களை சமாதானப்படுத்த அமைச்சர் ஒருவரை தூதுவிட்டு இனிமேல் இதுபோன்று நடக்காது என உறுதியளித்துவிட்டு வந்துள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 
இருப்பினும் தேமுதிக அதிமுகவின் கூட்டணியில் கடந்த இரண்டு தேர்தல்களாக இருந்து வரும் நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. நேற்றுதான் தேமுதிக அரசு மீது தொடர்ந்த வழக்குகளையும் வாபஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments