Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீலா நோடீலா? திமுகவா? அதிமுகவா? தேமுதிக இன்று முக்கிய ஆலோசனை

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (08:29 IST)
தேமுதிக யாருடன் கூட்டணி சேர போகிறது என்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
 
தேமுதிகவிற்கு திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படும் நிலையில் அதிமுக மற்றும் தேமுதிக இடையிலானக் கூட்டணிக்கே சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகிறது. பாமகவிற்கு கொடுத்தது போலவே, 7 சீட்டாவது வேண்டும் என்று தேமுதிக விடாப்பிடியாக உள்ளது. அவர்கள் கேட்கும் 7 சீட்டை கொடுத்துவிட்டால் மொத்தமாக 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கே கொடுக்கவேண்டிய நிலை அதிமுகவிற்கு ஏற்படும்(பாஜக - 5, பாமக-7) தேமுதிக கேட்கும் 7 என மொத்தம் 19 தொகுதிகள். தேமுதிகவின் சூட்டை குறைக்க 5 சீட் மற்றும் 150 கோடி ரூபாய் தேர்தல் நிதி கொடுக்க அதிமுக டீல் பேசி வருகிறதாம். 
 
இதற்கிடையே  கூட்டணி குறித்து இன்று முக்கிய ஆலோசனை எடுக்கப்படுவதாக தேமுதிக அறிவித்திருந்த நிலையில் நேற்று மாலை துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரடியாக விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று கூட்டணி குறித்து பேசினார். இதனால் இன்று தேமுதிக - அதிமுக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.
 
தேமுதிகவிற்கு எத்தனை தொகுதி? எந்தெந்த தொகுதி என்பது குறித்த தகவல் இன்று வெளியாகிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments