அட்ரா சக்கை! - ஜீயருக்கு எதிராக உண்ணும் விரதப் போராட்டம்

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (13:03 IST)
ஆண்டாள் சர்ச்சையில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜீயருக்கு எதிராக திராவிடக் கழகத்தினர் களம் இறங்கியுள்ளனர்.

 
ஆண்டாள் குறித்து தனது கட்டுரையில் கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய விஷயம் தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சையை எழுப்பியது. அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதித்து போராட்டம் நடத்தியது. 
 
இதனையடுத்து வைரமுத்து தனது கருத்து தவறாக திரிக்கப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜீயர் சடகோப ராமானுஜம் பிடிவாதமாக தனது இரண்டாம் கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
 
இந்நிலையில், ஜீயருக்கு எதிராக, கோவையில் பெரியார் திராவிடக் கழகத்தினர் உண்ணும் விரதப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். அதேபோல், இந்த விவகாரத்தில் வைரமுத்துவை தவறாக விமர்சித்த ஹெச்.ராஜாவை கண்டித்து, ஆண்டாள் கோவில் அருகில் வருகிற 12ம் தேதி உண்ணும் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி போலீசாரிடடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவா? தவெகவா?.. ஒரு கை பாத்திடலாம்!.. களத்தில் இறங்கும் விஜய்!..

நாளை ஹோட்டல்கள் இயங்காது!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

சிபிஐ விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க!.. இயக்குனர் அமீர் நக்கல்..

ராகுல் போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய ஸ்டாலின்!.. நடந்தது என்ன?...

காங்கிரஸுக்கு அதிக சீட்.. கொஞ்சம் குறைச்சி வாங்கிக்கோங்க!.. அப்செட்டில் தேமுதிக!..

அடுத்த கட்டுரையில்
Show comments