Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி நெருங்கிய நிலையிலும் வெறிச்சோடி கிடக்கும் ஜவுளிக்கடைகள்! ஆன்லைன் வியாபாரம் காரணமா?

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (20:19 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருவார்கள். குறிப்பாக சென்னை தி நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் மக்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில் ரங்கநாதன் தெரு உள்பட சென்னை நகரின் பல பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது 
 
இதற்கு முக்கிய காரணமாக ஆன்லைனில் கோடிக்கணக்கான வியாபாரம் நடப்பதையே வியாபாரிகள் காரணமாக கூறுகின்றனர். தீபாவளி பண்டிகையின் சிறப்பு தள்ளுபடி சேல்ஸ் என பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் ஏற்கனவே கோடிக்கணக்கில் வியாபாரத்தை முடித்து விட்டன. இதனால் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி உள்பட பல்வேறு காரணங்களால் தொழிலாளர்களுக்கு வேலை சரியாக கிடைக்கவில்லை என்பதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை படுமந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் தீபாவளி நெருங்கும் ஓரிரு நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் காத்திருக்கின்றனர். வியாபாரிகளின் நம்பிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments