Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செக்கெண்ட் ரவுண்டில் பிரம்மாண்ட டமாகா சேல்: ப்ளிப்கார்ட் பிக் தீபாவளி!!

Advertiesment
Flipkart Big Diwali Sale 2019
, வியாழன், 17 அக்டோபர் 2019 (15:08 IST)
பிளிப்கார்ட் தனது இரண்டாம் தீபாவளி விற்பனை தேதி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. 
 
பிளிப்கார்ட் தனது பிக் தீபாவளி விற்பனையின் முதல் சுற்றை கடந்த புதன்கிழமை முடித்து இரண்டாம் சுற்றிற்காக தேதியை அறிவித்துள்ளதும். ஆம், அக்டோபர் 21 துவங்கி அக்டோபர் 25 வரை ஐந்து நாட்கள் தீபாவளி விற்பனையை நடத்தவுள்ளது. 
 
இம்முறை விற்பனையில் 50,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 75% தள்ளுபடி வழங்கப்படும். குறிப்பாக எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பாகங்கள் மீது 90% தள்ளுபடி இருக்ககூடும். பிளிப்கார்ட் பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு 85% தள்ளுபடி கிடைக்கும்.
webdunia
விற்பனை நாட்களில் நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு மொபைல்போன்கள், டிவி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் ப்ளிப்கார்ட் டமாக டீல்ஸ் (Dhamaka Deals) மூலம் கூடுதல் தள்ளுபடியுடன் கிடைக்கும். 
 
அக்டோபர் 21 முதல் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு விற்பனை நடைபெறும். பிளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களுக்கு அக்டோபர் 20 இரவு 8 மணி முதலே விற்பனை துவங்கிவிடும். 
 
பிக் தீபாவளி விற்பனையின் போது எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”வசூல் ராஜா படம் மாதிரி இருக்கு”.. நீட் ஆள்மாறாட்ட வழக்கு குறித்து நீதிபதி கருத்து