Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்சி கவிழும் ; எங்கள் பக்கம் 40 எம்.எல்.ஏக்கள் - திவாகரன் அதிரடி

Advertiesment
ஆட்சி கவிழும் ; எங்கள் பக்கம் 40 எம்.எல்.ஏக்கள் - திவாகரன் அதிரடி
, புதன், 23 ஆகஸ்ட் 2017 (16:44 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பக்கம் 40 எம்.எல்.எக்கள் இருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.


 

 
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் அணி இனைந்த பின், அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது.  
 
மேலும்,  தங்கள் வசம் உள்ள எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணி பக்கம் சென்று விடக்கூடாது எனக் கருதிய தினகரன் தரப்பு, அவர்களை பாண்டிச்சேரியில் உள்ள விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது.
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன் “எடப்பாடி அரசு விரைவில் கவிழும். சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும். எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் இல்லாத அமைச்சரவை அமைய வேண்டும். படித்த இளைஞர்கள் பதவியில் அமர வேண்டும். 
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லை. ஏனெனில், எங்கள் பக்கம் 40 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். எனவே, மெஜாரிட்டி இல்லாத அரசுக்கு ஆளுநர் பதவிப்பிரமானம் செய்து வைத்தது தவறு. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடியால் வெற்றி பெற முடியாது. அதேபோல் வைத்தியலிங்கத்தை நீக்கியது போல் இன்னும் பலர் நீக்கப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவிடம் கதறி கதறி அழுத செங்கோட்டையன்: போட்டுடைத்த புகழேந்தி!