Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாவட்ட அளவில் முன்மாதிரியாக விளங்கும் பஞ்சாயத்து – ஊரடங்கு உத்திரவினை 100 சதவிகிதம் கடைபிடித்து வரும் பஞ்சாயத்து !

மாவட்ட அளவில் முன்மாதிரியாக விளங்கும் பஞ்சாயத்து – ஊரடங்கு உத்திரவினை 100 சதவிகிதம் கடைபிடித்து வரும் பஞ்சாயத்து !
, திங்கள், 30 மார்ச் 2020 (23:35 IST)
மாவட்ட அளவில் முன்மாதிரியாக விளங்கும் பஞ்சாயத்து – ஊரடங்கு உத்திரவினை 100 சதவிகிதம் கடைபிடித்து வருவதோடு, தூய்மை தொழிலாளர்கள் தினந்தோறும் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வரும் எலவனூர் பஞ்சாயத்து.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம்,  ஏலவனூர்  ஊராட்சியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்திரவு முழுவதுமாக கடைபிடிப்பதோடு, அப்பகுதியில் தூய்மைக்காவலர்களான தூய்மை தொழிலாளர்களை கொண்டு, எலவனூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி தலைமையில் பஞ்சாயத்திற்குட்பட்ட சின்னவணிக்கரை, கொடம்பன்நாயக்கன்புதூர், ஒத்தனூர் உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்களில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில்  கிராம  பகுதி  முழுவதும் தூய்மை செய்யும் விதமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் மினி ஆட்டோகள் மூலம் ஒலிப்பெருக்கிகள் கட்டி ஆங்காங்கே நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. சுமார் 500  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும்  நிலையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் எலவனூர், ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 4  நபர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையானவற்றை ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட்டு, அவர்களின்  வீடுகளை, தனிமைப்படுத்தப்பட்டு ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர்  கண்காணித்து  வருகின்றனர்.

மேலும், ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணியன் அவர்களே நேராக வீடுகளும் தோறும் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி, ஆங்காங்கே பணியாற்றும் தூய்மை  பணியாளர்கள் கையில் கிளவுஸ் கட்டிக் கொண்டு தான் பணியாற்ற வேண்டுமென்றும் உத்திரவினையும் பிறப்பித்ததோடு, சின்னதாராபுரம் பகுதியைச் சார்ந்த காவலர்களும்,  அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை பார்வையிட்டு அதில் எத்தனை நபர்கள் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிமுறைகள் கொண்டு அங்கே செய்யப்படும் விழிப்புணர்வு கரூர் மாவட்ட அளவில் முன்மாதிரியான பஞ்சாயத்தாக திகழ்கின்றது என்றால் அது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை –முதல்வர் பழனிசாமி