தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது, அது சாதாரன விஷயமல்ல என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சியில் நடைப்பெற்ற திராவிட இளைஞர் விழிப்புணர்வு பாசறை நிகழ்ச்சியில் பங்கேற வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம். காட்டு விலங்குகளை பட்டியலில் சேர்த்ததே ஜல்லிக்கட்டு தடைக்கான காரணம். விலங்குகள் நல வாரியத்தில் உள்ள பல உறுப்பினர்கள் கலாச்சாரத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.
மாணவர்கள் போரட்டத்தில் வன்முறைக்கு காரணமான காவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது. அது சாதாரண விஷயமல்ல. உச்சநீதிமன்றம் தடை விதித்தாலும் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். காவல்துறை ஜல்லிக்கட்டை தடுக்கக்கூடாது, என்றார்.