Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனாதிபதியை நிற்க வைத்துவிட்டு சேரில் அமர்ந்த பிரதமர் மோடி..! - கனிமொழி கண்டனம்..!

Advertiesment
Modi

Senthil Velan

, திங்கள், 1 ஏப்ரல் 2024 (13:21 IST)
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, அத்வானியின் வீட்டிற்கே சென்று விருதினை வழங்கினார்.
 
இதில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமரும், அத்வானியும் உட்கார்ந்துகொண்டும், ஜனாதிபதி நின்றுகொண்டும் இருந்தபடி புகைப்படம் எடுக்கப்பட்டது.
 
இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.  
 
ஜனாதிபதியை நிற்க வைத்துவிட்டு தான் உட்கார்ந்து இருந்ததன் மூலம் அவரை பகிரங்கமாக மோடி அவமதித்து விட்டார் என்று தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
மோடி ஜாதி மற்றும் பாலின ரீதியில் காட்டும் பாகுபாட்டை அவரது நடவடிக்கை எடுத்துக்காட்டிவிட்டதாக கனிமொழி விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: டாக்டர் ராமதாஸ்