Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை இழிவாக பேசுவது திமுகவினர்களுக்கு புதிதல்ல: ராதிகா சரத்குமார்

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (08:13 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை கூறிய ஆ ராசாவுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் பெண்களை தரக்குறைவாக பேசுவது திமுகவினருக்கு புதிது அல்ல என்று ராதிகா சரத்குமார் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்
 
நேற்று அவர் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் சமக போட்டியாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: மற்றவர்களை இழிவாகப் பேசுவது திமுகவுக்குப் புதிதல்ல. அங்கு நிறைய பேர் இது மாதிரித்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் மத்திய அமைச்சராக இருந்த ராசா முதல்வரை தரக்குறைவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. அதிமுக, திமுகவில் பிரதான தலைவர்கள் இல்லை. திமுகவில் ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுகவிலும் தலைவர் என்று சொல்வதற்கு ஆளில்லை. அதிமுகவில் ஆளுமையான தலைமை இல்லை என்பது உண்மை.
 
இந்த தேர்தலில் 5 கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆரோக்கியமான போட்டிதான். இது மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வழிவகுக்கும். தமிழக மக்கள் யாருக்கும் விலை போகாமல் வாக்களிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments