Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

Siva
திங்கள், 2 டிசம்பர் 2024 (09:31 IST)
தமிழகத்தில் உள்ள வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக எம்பிக்கள் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீசை திமுக எம்பிக்கள் அளித்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் மற்ற அலுவல்களை ஒத்தி வைத்துவிட்டு, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்புவது குறித்து விவாதிக்க கோரி திமுக எம்.பி. டி.ஆர். பாலு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பாராளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பாராளுமன்றத்தில் இரு அவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது திமுக எம்.பி. டி.ஆர். பாலு, தமிழக வெள்ள பாதிப்புகளை விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளதை அடுத்து, சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments