Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டத்தில் ஆலோசித்தது என்ன? ஜெயக்குமார் விளக்கம்

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (11:52 IST)
தற்போது ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் என்ன பேசப்பட்டது என செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ஜெயகுமார். 
 
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.
 
இதையடுத்து டெல்லி சென்று வந்த ஓபிஎஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே ஆதரவு திரட்ட திட்டமிட்டிருந்தார். நேற்று சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றார்.இந்நிலையில் திடீரென இன்று அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. 
 
இந்த அறிவிப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்குப் புறம்பானது என்றும் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்றும் அறிவித்தார். 
 
இதன் பின்னர் இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக பொருளாளர் பதவியை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சுகள் எழுந்தது. இதனிடையே தற்போது ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் என்ன பேசப்பட்டது என செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ஜெயகுமார். 
 
அவர் கூறியதாவது, வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்த முடிவு எடுக்கப்பட்டது . இன்று சென்னை அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 பேர் மட்டுமே வரவில்லை. தலைமை கழக நிர்வாகிகள் 70 பேரில் 65 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் சில முடிவுகள் இந்த அலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்று தகவல் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments