Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உறவுகள் பற்றி சொல்லிக் கொடுக்க மறந்து விட்டோம் -வசந்த பாலன் கூறிய நெகிழ்ச்சி கதை

Advertiesment
உறவுகள் பற்றி சொல்லிக் கொடுக்க மறந்து விட்டோம் -வசந்த பாலன் கூறிய நெகிழ்ச்சி கதை
, செவ்வாய், 28 மார்ச் 2017 (19:15 IST)
வெயில், அங்காடித் தெரு போன்ற படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் சமீபத்தில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான கதையை பதிவு செய்துள்ளார்.


 

 
அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
நேற்று பிரபஞ்சன் தலைமையேற்ற கவிஞர் நரனின் லாகிரி கவிதை விமர்சனக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது பிரபஞ்சன் ஒரு உண்மை சம்பவத்தை கூறினார்.
 
மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மனைவியின் இறப்புக்கு பிறகு அப்பா தனியாக வாழ்கிறார். தனிமை அவரை தொந்தரவு செய்கிறது.
 
வாரம் ஒரு முறை பேசும் மகனிடம் சொன்னார். தம்பி! உங்க அம்மா போன பிறகு இங்க தனியா இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு...அங்க அமெரிக்கா வந்து உன்னோட இருந்தன்னா, பேரபிள்ளைகளை பார்த்துக்கொண்டு சந்தோசமாயிருப்பேன். நான் தனியாதான இங்க இருக்கேன். அங்க வந்துர்றேன் என்று சொல்லி முடிப்பதற்குள் மகன் பேச்சை மறுத்தான். No No No No No No daddy. Death is very costly affair here.no... no...ஏகப்பட்ட பார்மாலிட்டிஸ் here. 
 
நீங்க அங்க இந்தியாலயே இருங்க மாதம் ரெண்டாயிரம் சேத்து அனுப்புறேன். புத்தகங்களை வாங்கி படிங்க.சினிமாக்கு போங்க.பூங்காக்கு போங்க.கோயில் கொளத்துக்கு போங்க...எவனாவது வடஇந்தியா டூர் போட்டு இருப்பான் போயிட்டு வாங்க.நெட்டுல பாத்துட்டு வேணா நான் சொல்றேன்...என்று மகன் பேசி முடித்தான். அப்பாக்கு குரல் கிணற்றுக்குள் போயிவிட்டது. அப்பா போன வெச்சுறேன் ஆபிஸ் கால் ஒன்னு வருது என்றபடி மகன் போனை வைத்துவிட்டான்.
 
அந்த அப்பா கண்ணீர் விட்டபடியே இந்த நிகழ்வை பிரபஞ்சனிடம் கூறினாராம். பிரபஞ்சன் சொன்னார் ஒவ்வொரு உயிரும் தனியானது. மகன் என்றாலும் அவன் தனி மனிதன் தான். பணம் சம்பாரிக்க வேண்டும் என்று பள்ளி வீடு சமுதாயம் அனைவரும் சொல்லிக் கொடுத்தோம். உறவுகள் முக்கியமுன்னு சொல்லி கொடுக்க மறந்து விட்டோம். அதனால் டாலர்களை பார்த்தவண்ணம் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்றாராம்.
 
எதை விதைத்தோமோ அதை தான் அறுக்கமுடியும்.  
 
இந்த கதை பலரின் மனதை களங்கடித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோதிடர் பேச்சை நம்பி 10 குழந்தைகள் பெற்ற தொழிலாளி...