Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குநர் பா. ரஞ்சித் மீது வழக்குப்பதிவு : திரைத்துறையினர் அதிர்ச்சி

இயக்குநர் பா. ரஞ்சித் மீது வழக்குப்பதிவு : திரைத்துறையினர் அதிர்ச்சி
, செவ்வாய், 11 ஜூன் 2019 (15:58 IST)
பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது திரைதுறையினர் மத்தியிலும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி , காலா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ப. ரஞ்சித்.ஐவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறிவருகிறார். ஆனால்  சில நேரங்களில் அவர் கூறும் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது.
 
கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி கடுமையான விமர்சித்தார்.
 
அதில் முக்கியமான மன்னர் ராஜராஜனை அவன்,இவர் என ஒருமையில் விமர்சித்தார். ஒருகட்டத்தில் ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் தலித்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது என்று கூறினார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
 
பா. ரஞ்சித்தின் பேச்சுக்கு  சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்துஅமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன.
 
இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலிஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக 15,153A ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
மேலும் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதாக பா,.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலிஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.
 
இயக்குநர் பா. ரஞ்சித் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் சினிமாதுறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாயமான இந்திய விமானம் கண்டுபிடிக்கப்பட்டது: பயணிகள் கதி?