Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவரைப் பாருங்கள் – டிவிட்டரில் மோதிக்கொள்ளும் மீரா மிதுன் & இயக்குனர் நவீன் !

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (19:59 IST)
அக்னி சிறகுகள் படத்தில் நடிப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனை தொடர்பாக நடிகை மீரா மிதுன் மற்றும் இயக்குனர் நவீன் இடையே டிவிட்டரில் காரசாரமான விவாதம் நடந்துகொண்டு உள்ளது.

இயக்குனர் நவீன் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் 'அக்னிச் சிறகுகள் படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக முதலில் பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் அவருக்குப் பதிலாக அக்‌ஷரா ஹாசன் நடிக்க இருப்பதாக செய்திகள்  வெளியாகின.

இதனால் கோபமான மீராமிதுன் இயக்குனர் நவீனை குறிப்பிட்டு தன் கருத்துகளைக் கோபமாக வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து அவருக்குப் பதிலளித்த நவீன் ‘எனக்கு தெரியாமலேயே இந்தப் படம் தொடர்பாக மீரா மிதுன் ஊடகங்களில் பேட்டிக் கொடுத்து வருகிறார்.’ எனக் கூறினார்.

அவருக்குப் பதிலளிக்கும் வகையில் ‘பொய் சொல்லுவது நீங்கள்தான். என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறு பொய் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் அவற்றை வெளியிடுவேன். ’எனக் கூற நவீன் ‘நீங்கள் நல்ல மன நல மருத்துவரைப் பாருங்கள் ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments