நாளை முதல் சென்னையில் இருந்து பினாங்கு தீவுக்கு நேரடி விமானம்..நிறைவேறிய நீண்டநாள் கோரிக்கை..!

Siva
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (09:45 IST)
மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட வேண்டும் என பல மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது நாளை முதல், அதாவது டிசம்பர் 21ஆம் தேதி முதல், நேரடி விமான சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் இருந்து நேரடி விமான சேவை இருந்து வரும் நிலையில், உள்ள மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான பினாங்கு தீவுக்கு நேரடி விமானம் இயக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

பினாங்கு தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால், சென்னையில் இருந்து நேரடி விமானம் இயக்கப்பட வேண்டிய அவசியத்தையும் பயணிகள் குறிப்பிட்டு வந்தனர்.  இந்த நிலையில், சென்னையில் இருந்து பினாங்கு நேரடி விமான சேவையை தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதை அடுத்து, நாளை முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை–பினாங்கு தீவு நேரடி விமான சேவையை இயக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் பினாங்கு தீவு இடையிலான பயண தூரம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ரூ.11,000ஐ தாண்டியது..!

டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பண மோசடி செய்த கும்பல்.. டெல்லி சென்று கைது செய்த தமிழக காவல்துறை..!

புல்டோசரால் மசூதியை இடித்து தள்ளிய முஸ்லீம்கள்.. என்ன காரணம்?

ரெளடியின் வாடகை அறையில் பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்பு; கொலையா? அதிர்ச்சி சம்பவம்..

அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 7 பேர் பலி; ஊழியர்கள் தப்பி ஓடியதாக புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments