தினகரனை மிரட்டும் ஆதரவு எம்எல்ஏக்கள்!
தினகரனை மிரட்டும் ஆதரவு எம்எல்ஏக்கள்!
சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்த டிடிவி தினகரனை தற்போது எடப்பாடி அணி ஒதுக்கி வைத்துள்ளது. இதனால் தினகரன் ஆதர எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை அடையாரில் உள்ள தினகரன் வீட்டில் அவரது முக்கிய ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் உட்பட ஏழு பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி அணியினர் தொடர்ந்து தினகரனை புறக்கணித்து வருவதை ஆலோசித்தனர். இதனால் அவர்கள் அதிருப்தியுள்ளனர். குறிப்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, இஃப்தார் நோம்பு விருந்து, பாஜக ஜனாதிபதி வேட்பாளர் சென்னை வந்து தினகரனை சந்திகாமல் சென்றது, ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க கோரிக்கை வைத்தும் அதனை நிறைவேற்றாதது என பல விவாதங்கள் நடந்துள்ளது.
இந்நிலையில் சட்டசபை கூட்டம் முடிந்ததும் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் இல்லையென்றால் பழனிச்சாமி ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்போம் என தினகரனை மிரட்டும் விதமாக அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியதாக தவல்கள் வருகின்றன.