Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் கைது விவரம்; அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

தினகரன் கைது விவரம்; அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

Webdunia
புதன், 10 மே 2017 (13:38 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் டிடிவி தினகரன் மீது ஏற்கனவே அந்நிய செலாவணி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்ட விவரத்தை அளிக்காத அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் குட்டு வைத்தது.


 
 
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்ட விவரத்தை தெரிவிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
 
ஆனால் மூன்று வார கால அவகாசம் கொடுத்தும் அமலாக்கத்துறை இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தினகரன் கைது குறித்தான விவரத்தை அளிக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி இன்னும் அரை மணி நேரத்தில் தினகரன் கைது குறித்தான தகவலை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் தினகரன் கைது குறித்த விவரத்தை அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து மே 12-ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்த நீதிபதி, அன்றைய தினம் தினகரன் கைது குறித்த முழு விவரத்தையும் அளிக்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments