Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சுதாகரனுக்கு பிடிவாரண்ட்!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சுதாகரனுக்கு பிடிவாரண்ட்!

Webdunia
புதன், 10 மே 2017 (13:07 IST)
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவின் அண்ணன் மகன் சுதாகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியிருந்த சுதாகரனுக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து சசிகலா, இளவரசி ஆகியோருடன் சேர்ந்து சுதாகரனும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதனையடுத்து இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் மூலம் 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த சூழ்நிலையில் பாஸ்கரன் மற்றும் சிறையில் உள்ள தினகரன், சுதாகரன் ஆகியோர் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
இந்த வழக்கில் ஆஜராக சுதாகரனுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்று சுதாகரன் ஆஜராகாததால், அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பெங்களூர் சிறையில் உள்ள சுதாகரனை ஜூன் 7-ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments