திமுகவை போன்று அடக்குமுறையை கையாளும் எடப்பாடி: தினகரன் பாய்ச்சல்!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (15:18 IST)
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.
 
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ஆர்கே நகர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு எங்களுக்கு முக்கியம் இல்லை. மக்களின் கருத்துதான் முக்கியம். மக்களுக்கு என் மீது நம்பிக்கை உள்ளது அவர்கள் எங்களுக்கு வெற்றியை தருவார்கள்.
 
எம்ஜிஆர் தேர்தலில் நின்றபோது திமுக அடக்கு முறையை கையாண்டது. அதே அடக்கு முறையை எடப்பாடி பழனிசாமி அரசு இப்போது எனக்கு எதிராக மேற்கொள்கிறது. தேர்தலில் அவர்கள் மண்ணை கவ்வுவார்கள். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இந்த தேர்தல் தொடக்கமாக அமையும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments