Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது’’- முதல்வர்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (20:19 IST)
69 ஆவது தேசிய விருதுகள் இன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,  ''மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது’’ என்று   முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

69 ஆவது தேசிய விருதுகள் இன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழில் சிறந்த படமாக எம். மணிகண்டனின் கடைசி விவசாயி படம் தேர்வாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற கடைசி விவசாயி உள்ளிட்ட படக்குழுவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் 'கடைசி விவசாயி' படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!

விஜய்சேதுபதி, மணிகண்டன்,  நல்லாண்டி  மேலும், இரவின்நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள ‘சிற்பிகளின்சிற்பங்கள் ‘படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான ‘ நர்கீஸ்தத்’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது’’ என்றுதெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments