கரூர் நகரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள பத்திரிக்கை அலுவலகத்தில் அறிய வகை ஆந்தை தஞ்சம் புகுந்தது.
காட்டு பகுதியில் இருக்கும் அறிய வகை ஆந்தை நகர் பகுதிக்கு திசைமாறி வந்தது கண்டு பொதுமக்கள் அறிய வகை ஆந்தையை ஆர்வத்தோடு பார்த்து சென்றனர்.
பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயனைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கரூர் தீயனைப்புத்துறையினர் ஆந்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஓப்படைத்தனர்.
பத்திரிக்கை அலுவலகத்தில் ஆந்தை தஞ்சம் புகுந்ததை கண்ட பொது மக்கள் காடுகளை அழிப்பதை ஆந்தை புகார் செய்ய வந்துவிட்டதோ என வேடிக்கையாக பேசி சென்றனர்.