Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணில்கடித்து மின்கம்பிகள் துண்டாகினவா ? அணில் கடித்து ஆடுகள் இறந்தனவா ? விவசாயிகள் சோகம்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (00:02 IST)
< >
அணில்கடித்து மின்கம்பிகள் துண்டாகினவா ? அணில் கடித்து ஆடுகள் இறந்தனவா ? விவசாயிகள் சோகம் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்ட்த்தில் உள்ள அரவக்குறிச்சி அருகே 12 ஆடுகளை மேய்ச்சலுக்கு இருந்த போது மின்சாரம் பாய்ந்து துடி துடித்து இறந்த தகவல் அறிந்த தமிழக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் மொடக்கூர் மேல்பாகம் கோவிலூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி அவருடைய விவசாய நிலத்தில், அவருக்கு சொந்தமான 12 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது கம்பி வேலி ஓரம் ஒதுங்கி இருந்த ஆடுகள் மீது விவசாய நிலத்திற்கு மேலே செல்லும் மின்சார கம்பி, கம்பி வேலி மீது அறுந்து விழுந்தது அருகில் நின்றிருந்த ஆடுகள் மீது மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தது. செய்தியறிந்த மொடக்கூர் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி மற்றும் மீனாட்சி வலசு கால்நடை மருத்துவர் பெரியசாமி ஆகியோர் நேரில் சென்று விசாரித்து ஆய்வு செய்தனர். இறந்து போன ஆடுகளை உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஆடுகளின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு அவருடைய சொந்த நிலத்தில் அனைத்து ஆடுகளும் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டன. மின் வாரியத்தின் அலட்சியத்தால் இன்று 12 ஆடுகள் அநியாமாக உயிரிழந்ததால் விவசாயி பெரியசாமியின் ஆடு வளர்க்கும் தொழில் பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்த தமிழக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆடுகளை இழந்து தவிக்கும் விவசாயி பெரியசாமி உடைய இல்லத்திற்கு அதிமுக நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன், ஒன்றிய துணை பெருந்தலைவர் ஆண்டாள், மாவட்ட கவுன்சிலர் இந்திரா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணி, சின்னசாமி உள்ளிட்டோர் மற்றும் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ராதிகா, தண்டபாணி, கிருஷ்ணன், தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஏற்கனவே அணில்கடித்து தான் மின் தடை என்று தற்போதைய மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கூறிய நிலையில்,. இந்த மின் கம்பிகள் ஒருவேளை அணில் கடித்து தான் மின்சார கம்பிகள் அறுந்தனவா ? என்று நெட்டிசன்கள் இப்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழக அளவில் வைரலாகி வருகின்றன. இதுமட்டுமில்லாமல், ஏற்கனவே இதே போல, மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. மேலும், இதனருகிலேயே அரசு உயர்நிலைப்பள்ளி இப்பகுதியில் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் அதிமுக வினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
< >
< >
 
< >
 
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்ட்த்தில் உள்ள அரவக்குறிச்சி அருகே 12 ஆடுகளை மேய்ச்சலுக்கு இருந்த போது மின்சாரம் பாய்ந்து துடி துடித்து இறந்த தகவல் அறிந்த தமிழக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் மொடக்கூர் மேல்பாகம் கோவிலூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி அவருடைய விவசாய நிலத்தில், அவருக்கு சொந்தமான 12 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது கம்பி வேலி ஓரம் ஒதுங்கி இருந்த ஆடுகள் மீது விவசாய நிலத்திற்கு மேலே செல்லும் மின்சார கம்பி, கம்பி வேலி மீது அறுந்து விழுந்தது அருகில் நின்றிருந்த ஆடுகள் மீது மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தது. செய்தியறிந்த மொடக்கூர் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி மற்றும் மீனாட்சி வலசு கால்நடை மருத்துவர் பெரியசாமி ஆகியோர் நேரில் சென்று  விசாரித்து ஆய்வு செய்தனர். இறந்து போன ஆடுகளை  உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஆடுகளின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு அவருடைய சொந்த நிலத்தில் அனைத்து ஆடுகளும் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டன. மின் வாரியத்தின் அலட்சியத்தால் இன்று 12 ஆடுகள் அநியாமாக உயிரிழந்ததால் விவசாயி பெரியசாமியின் ஆடு வளர்க்கும் தொழில் பெரும் பாதிப்பு  உள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்த தமிழக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆடுகளை இழந்து தவிக்கும் விவசாயி பெரியசாமி உடைய இல்லத்திற்கு  அதிமுக நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன், ஒன்றிய துணை பெருந்தலைவர் ஆண்டாள், மாவட்ட கவுன்சிலர் இந்திரா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணி, சின்னசாமி உள்ளிட்டோர் மற்றும் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ராதிகா, தண்டபாணி, கிருஷ்ணன், தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
ஏற்கனவே அணில்கடித்து தான் மின் தடை என்று தற்போதைய மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கூறிய நிலையில்,. இந்த மின் கம்பிகள் ஒருவேளை அணில் கடித்து தான் மின்சார கம்பிகள் அறுந்தனவா ? என்று நெட்டிசன்கள் இப்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழக அளவில் வைரலாகி வருகின்றன. இதுமட்டுமில்லாமல், ஏற்கனவே இதே போல, மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. மேலும், இதனருகிலேயே அரசு உயர்நிலைப்பள்ளி இப்பகுதியில் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் அதிமுக வினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments