Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’திமுகவின் ஆட்சி கவிழ இதுதான் காரணமா ? ‘ - தம்பிதுரை விளக்கம்

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (11:50 IST)
கடந்த சில தினங்களாக திமுக பொருளாளர் துரைமுருகனுக்கும் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஸுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தைகள் சம்பந்தமாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். இதற்கு நேற்று விளக்கம் அளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை நீ, வா , போ, உனக்கு என்று ஒருமையில் பேசினார். இதனால் அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேமுதிக ரகசியமாக திமுகவுடன் கூட்டணி குறித்து பேசும் அதே வேளையில் அதிமுகவுடனும் கூட்டணி குறித்து பேசுவதாகவும் பேசப்பட்டது. ஆனால் திமுக பொருளாளரிடம் சொந்த விஷயமாக தேமுகவினர் பேச வந்ததை துரைமுருகன் செய்தியாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்ததாக  தேமுதிக, அதிமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக மீது குற்றம் சாட்டினர்.
 
இது குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:
 
ரகசியத்தை காப்பாற்ற தெரியாத திமுகவால் எப்படி நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், தேமுதிக ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும் கூட அந்த ரகசியத்தை வெளியிட்டிருக்கக் கூடாது திமுக. சந்திரசேகர் பிரதமராக இருந்த போது ரகசியத்தை வெளியிட்டதால்தான் திமுக ஆட்சியை இழந்தது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments