Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

11 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி- 3 மாதக் குழந்தை பலி!

Advertiesment
Born Child
, திங்கள், 13 மார்ச் 2023 (18:33 IST)
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் தனியார் குழந்தைகள்  நலக் காப்பகத்தில் திடீரென்று 11 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மாம்பழம்சாலையில் தனியார் குழந்தைகள் நலக்காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தக் குழந்தைகள் நலக்காப்பகத்தில்  பெற்றோர் இல்லாத குழந்தைகள், தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் மீட்க்கப்பட்ட பல குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது, இந்தக் குழந்தைள் நலக்காப்பகத்தில் 32 குழந்தகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் 11 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.

இதையடுத்து, குழந்தைகள் 11 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், 3 மாதக் குழந்தை ஒன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில், குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள வாந்தி,. மயக்கத்திற்கு காரணம் என்ன என்று மாவட்ட ஆட்சியர் விசாரணை  நடத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு! மாணவ மாணவிகள் ஆர்வம்..!