கல்யாணம் பண்ணாமலேயே குழந்தை!.. சத்யராஜ் பொண்ணு திவ்யா வேறலெவல்!...

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2026 (15:14 IST)
சத்யராஜின் மகன் திவ்யா. இவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். சென்னையில் ஊட்டச்சத்து மருத்துவமனையும் நடத்தி வருகிறார்.  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா தொடர்ந்து ஊட்டச்சத்தை தொடர்பான அறிவுரைகளை கூறிவந்தார். திடீரென தன்னை திமுகவிலும் திவ்யா இணைத்துக் கொண்டார். அங்கு அவருக்கு பதவியும் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல் திமுக மேடைகளிலும் விஜயை விமர்சித்து பேசி வந்தார். அதேநேரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திவ்யாவுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஒருபக்கம் திமுகவுக்கு ஆதரவாக திவ்யாவின் அப்பா சத்யராஜும் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய திவ்யா ‘ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்பதற்காக ஒன்னா இருக்கக் கூடாது. அவங்களுக்குள்ள காதல் இருக்கணும்.. எனக்கு ஜாதகம் பார்த்து ஒரு மாதத்தில் நடக்கிற கல்யாணத்து மேல நம்பிக்கை இல்லை.. ஒருத்தருக்கு ஒருத்தர் புடிச்சிருந்தா யார் கூட வேணா போய் வாழலாம்.. சேர்ந்து கூட வாழணும்னு இல்ல.. அவங்கவங்க வீட்ல கூட வாழலாம்.. கல்யாணம் பண்ணாம குழந்த பிறக்கிறது கூட எனக்கு சம்மதம்தான்’ என அதிரடியாக பேசியிருக்கிறார். திவ்யாவின் அப்பா சத்யராஜ் ஒரு பெரியாரிஸ்ட். தனது திரைப்படங்களில் நிறைய முற்போக்கு மற்றும் பகுத்தறிவு கருத்துக்களை காமெடி மூலம் சொல்லியவர். தற்போது அவரின் மகளும் பகுத்தறிவாதியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி!.. பாலியல் மாத்திரை போட்ட வாலிபர் மரணம்!...

மோட்டோரோலா Razr Ultra Foldable ஸ்மார்ட்போன்.. ஏப்ரல் 29ஆம் தேதி அறிமுகம்.. OLED திரை மற்றும் AI கேமரா..

காதல் விவகாரம்!. மகளின் கொலைக்கு பழிவாங்கிய தந்தை!.. வாலிபர் வெட்டிக்கொலை!...

புதிய கட்சியை ஆரம்பித்த சந்திரசேகர்ராவ் மகள் கவிதா.. கட்சியின் பெயர் அறிவிப்பு..!

தமிழகத்தில் சில தொகுதிகளில் மறுவாக்குபதிவு உண்டா?.. தேர்தல் ஆணையம் பதில்!..

அடுத்த கட்டுரையில்
Show comments