பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆர்.கே நகர் நகர் தொகுதி எம்ஏல்ஏ தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்.எனவே தனக்கு குக்கர் சின்னத்தையே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், அவரது கட்சிக்கு அனைத்திந்திய அம்மா அண்ணா திமுக, எம்ஜிஆர் திமுக, எம்ஜிஆர் அம்மா திக என அவர் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஒன்றை வைக்க அனுமதி வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்தது தினகரன் வரும் வியாழக்கிழமை மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், இன்று அவர் பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.