அன்புமணியை விலைக்கு வாங்கும் அளவிற்கு பணமில்லை - தயாநிதி!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (14:32 IST)
திமுக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் அளித்துள்ளார். 
 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் பாமக இடம் பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாசும், யார் அதிக பணம் தருகிறார்கள் என பேரம் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு திமுகவிடம் பணம் இல்லை கொள்கை மட்டும் தான் உள்ளது.  
 
அதிமுகவிடம் நிறைய பணம் உள்ளது அவர்கள் வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்க்கலாம். பாராளுமன்றத் தேர்தலின் போது இட ஒதுக்கீடு கொள்கையை பேசாமல் சாகும் போது சங்கரா சங்கரா என்பது போல டாக்டர் ராமதாஸ் தற்போது இட ஒதுக்கீடு கொள்கை குறித்து பேசுகிறார். மக்களை ஏமாற்றி அவருடைய மகனும் பணம் சம்பாதித்து வருகின்றனர் என விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments