Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொகுசு காருக்கு வரி விலக்கு - தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:02 IST)
சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட நடிகர் தனுஷின் வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. 

 
இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 
 
அந்த வகையில் வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
 
காருக்கு 60,66,000 ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் இந்த வழக்கை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

டெல்லி தேர்தல் முடிவுகள் பீகாரிலும் எதிரொலிக்குமா? தேஜஸ்வி யாதவ் கருத்து..!

எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாமல் அதிமுக விழா! புறக்கணித்த செங்கோட்டையன்! - எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி?

ஈ-ரிக்சா துறையில் காலடி வைக்கும் பஜாஜ் ஆட்டோ.. பயணிகளுக்கு புது அனுபவம்?

சென்னை அண்ணா நூலகத்தில் தொடுதிரை வசதி.. இனி எளிமையாக வாசிக்கலாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments