தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, நாளை காலை 7 மணிக்கெல்லாம் அனைத்து காவல் அதிகாரிகளும் பணிக்கு சீருடையில் வந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தின் முடிவில், மறு உத்தரவு வரும் வரை உயர் போலீஸ் அதிகாரிகள் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல், அனைத்து காவல் அதிகாரிகளும் இன்று காலை 7 மணிக்கு சீருடையுடன் காவல் நிலையத்தில் ஆஜராகி விட வேண்டும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.