Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்ட பக்தர்கள் – வினோத வழிபாடு

கொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்ட பக்தர்கள் – வினோத வழிபாடு
, செவ்வாய், 22 ஜனவரி 2019 (13:14 IST)
தமிழகம் முழுவதும் நேற்று தைப்பூச திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள வடலூர், பழனி ஆகிய இடங்களில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாக்களில் கலந்துகொண்ட பக்தர்கள் முருகனுக்குத் தங்கள் காணிக்கைகளை செலுத்தி வழிபட்டனர்.

தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் முருகனுக்குக் காவடி எடுத்தல், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற வழிபாடுகள் மூலம் காணிக்கை செலுத்துவது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் வினோதமான வழிபாடு நடத்தினர்.

அது என்னவென்றால் கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் கைகளை விட்டு வடை சூட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞரையே எதிர்த்து பேசியவர் அஜித்: புகழ்ந்துதள்ளிய அமைச்சர் ஜெயகுமார்!!!