Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்த் கட்சியில் இருந்தவர்களுக்கு திமுகவில் பதவி!

Advertiesment
சந்திரகுமார்
, திங்கள், 5 செப்டம்பர் 2016 (15:19 IST)
சந்திரகுமார் தலைமையில் விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் இருந்து சிலர் வெளியேறி மக்கள் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்தனர்.


 


அவர்கள், 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு, தோல்வியடைந்தனர். பின்னர் தங்கள் கட்சியை தி.மு.க.வுடன் இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், அவர்களுக்கு, தி.மு.க.வில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், சந்திரகுமாருக்கு கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவியும், பார்த்திபனுக்கு தேர்தல் பணிக் குழு செயலாளர் பதவியும், ரவீந்திரனுக்கு செய்தி தொடர்பு இணைச் செயலாளர் பதவியும், அப்துல் காதருக்கு விவசாய அணி இணைச் செயலாளர் பதவியும் வழங்கப்படுள்ளது. மேலும், சேகர் மற்றும் சிவாவை தீர்மானக்குழு உறுப்பினராக்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாய்