Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனியில் இருந்து சென்னை திரும்பிய ஓபிஎஸ்: அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (07:44 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த பிரச்சனை உச்சக்கட்டத்தில் உள்ளது 
 
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இது குறித்து காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர் என்பதும், உச்சகட்டமாக சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இதுகுறித்து வாதம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென தேனி சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ், அங்கு ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் 
 
இந்த நிலையில் இன்று அவர் சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பிய உடன் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் நாளை அறிவிக்கப்பட உள்ள முதல்வர் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் தீவிர ஆலோசனையில் பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஆனால் அதிமுக வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது நாளை முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வராது என்றும் அப்படியே வந்தாலும் ஈபிஎஸ் பெயர்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து வருவதால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments