Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.7.63 கோடி அபராதம் வசூல்!

Webdunia
திங்கள், 25 மே 2020 (11:16 IST)
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,26,507 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு என காவல்துறையினர் தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.      
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.    
 
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 5,26,507 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் ; 4,20,688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 4,94,770  வழக்குகள் பதிவு, ரூ.7.63 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments