Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவாகிறதா குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி?

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (13:27 IST)
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வெப்பசலனம் காரணமாக சில மாவட்டங்களில் மிதமான மழையும் அவ்வபோது பெய்து வருகிறது.
 
தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 29, 30 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் லெசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதால் மே 4, 5-ல் அந்தமான் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

அடுத்த கட்டுரையில்
Show comments