வங்க கடலில் சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கரையை கடந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்காள விரிகுடாவில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து விசாகப்பட்டிணம் அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திராவில் பெய்த அதிகனமழையால் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வடக்கு ஆந்திரா பகுதி நோக்கி சென்று கரையை கடக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் பெரும்பாலும் மழை இருக்காது என்றாலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கலாம் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K