திமுக ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது போல் சித்தரிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் நேரலையை திமுக அரசு தடுக்க முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலின் அடிப்படை கூட தெரியாமல் நிர்மலா சீதாராமன் பேசுகிறார் என தெரிவித்தார்.
ராமர் கோவில் விவாகரத்தை குற்ற நோக்கத்தோடு நிர்மலா சீதாராமன் அணுகுவதாகவும், திமுக ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது போல் சித்தரிப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினர்.
மேலும் கோதண்டராமர் கோவில் அர்ச்சகர்கள் அச்ச உணர்வுடன் இருப்பதாக ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
கோதண்டராமர் கோவிலில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அனைத்து வரவேற்பும் அளிக்கப்பட்டது என்றும் கோவில் அச்சகர்களுக்கு எந்தவித பயமும் இல்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.