Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல்துறையினரை கண்டித்து ஆர்பாட்டம் அறிவிப்பு!!

காவல்துறையினரை கண்டித்து ஆர்பாட்டம் அறிவிப்பு!!
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (22:25 IST)
தே.மு.தி.க கட்சியின்ஒன்றிய செயலாளரை தாக்கிய மர்ம கும்பல் மீது இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை ... எனவே கரூர்மாவட்ட தே.மு.தி.க சார்பில் வரும் 2 ம் தேதி காவல்துறையினரை கண்டித்து ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
தே.மு.தி.க கட்சியின் ஒன்றிய செயலாளரை தாக்கிய மர்ம கும்பல் மீது இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை | கரூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் வரும் 2 ம் தேதி காவல்துறையினரை கண்டித்து ஆர்பாட்டம் அறிவிப்பு
 
கரூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அரவை எம்.முத்து தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளர் கே.வி.தங்கவேல் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, கடந்த ஜூலை மாதம் 22 ம் தேதி அன்று கரூர் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.ஜெயக்குமார் அவர்களை, அடையாளம் தெரியாத கூலிப்படை ஆட்கள் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தி, தாக்குதலுக்குண்டான ஜெயக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் இது தொடர்பாக வெங்கமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துளனர். இந்நிலையில், வெறும் வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள காவல்துறை இன்று வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கூலிப்படை ஆட்களை கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது இன்றுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கரூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டது. 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்.., தே.மு.தி.க நிறுவனத்தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கேப்டனின் உத்திரவிற்கிணங்க, அண்ணியார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனைக்கிணங்க, வரும் 2 ம் தேதி அன்று கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாகவும், ஒன்றிய செயலாளரின் மீது தாக்குதல் ஏற்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை தேவை என்றும் தே.மு.தி.க கரூர் மாவட்ட செயலாளர் கே.வி.தங்கவேல் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பேட்டியின் போது., கரூர் மாவட்ட அவைத்தலைவர் அரவை.எம்.முத்து,  கரூர் மாவட்ட பொருளாளர் கஸ்தூரி தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் சோமூர் ரவி., கரூர் நகர செயலாளர் காந்தி.,  கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திக், தனபால், பாலு மற்றும் உப்பிடமங்கலம் பேரூர் கழக மாணவரணி செயலாளர் திருமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்குமா?