அங்க சுத்தி இங்க சுத்தி தமிழ்நாட்டிற்குள் நுழைந்த டெல்டா பிளஸ் !

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (08:39 IST)
தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா தாக்கி இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

 
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. 
 
இந்த வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் புகுந்து செல்லும் திறன் கொண்டது என்றும் எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களாக இருந்தாலும் இந்த புதிய டெல்டா பிளஸ் வைரஸ் எளிதில் தொற்று பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், கேரளா, மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா தாக்கி இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது, டெல்டா பிளஸ் பாதிப்புக்குள்ளான பெண் தடுப்பூசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் முறையாக 2 தவணையும் செலுத்தினாரா என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments