Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.விற்கு அளித்த சிகிச்சை என்ன? - எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை தாக்கல்

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (14:15 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்து தமிழக அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.


 

 
ஜெ.வின் மர்ம மரணம் குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்து கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ் அணி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. 
 
இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், சென்னை வந்து,  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெ.விற்கு சில நாட்கள் சிகிச்சை அளித்தனர்
 
எனவே, ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விபரங்களை அளிக்கும்படி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் தமிழக அரசு  கேட்டது. இதை ஏற்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மொத்தம் 5 அறிக்கைகளை இன்று தாக்கல் செய்துள்ளனர். டெல்லியில் இருந்த தமிழக அரசின் சுகாதாரத்துரை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் அந்த அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 
அந்த அறிக்கையில், ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் முழு விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த விபரங்களை சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பின் மூலம் விரைவில் வெளியிடுவார் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

புல்வாமா தாக்குதல் குற்றவாளி.. திடீரென சிறையில் உயிரிழந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

சர்ச்சையானாலும் விற்பனையில் குறைவில்லை.. 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை..!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்.. அவசரமாக கொடுத்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments