Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.விற்கு மாரடைப்பு வந்ததற்கு காரணம்? - வெளியான பகீர் தகவல்

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (13:35 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பில் மரணம் அடைந்ததற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக, ஜெயலலிதா கடந்த வருடம் செப். 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நலம் தேறி வருவதாகவும், அவர் தன்னை சுற்றி நடப்பதை புரிந்து கொள்கிறார் எனவும், அவர் விரும்பிய உணவுகள் அவருக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்வப்போது மருத்துவனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது. அந்நிலையில், டிசம்பர் 4ம் தேதி மாலை, அவருக்கு தீடீரெனெ மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அடுத்த நாள் 5ம் தேதி அவர் இறந்து விட்டதாகவும் அன்றிரவு 11.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
 
நீதிமன்றத்திற்கு அப்பல்லோ நிர்வாகம் அளித்த அறிக்கையில், ஜெயலலிதா இயற்கையாக மரணம் அடைவதற்கு அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டிருந்தது. இதனால், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பி.எஸ் அணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பி  வருகின்றனர். 
 
இந்நிலையில், டிசம்பர் 4ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் என சில தகவல் வெளிவந்துள்ளது. ஜெ.வின் உடல் நிலை தேறி வந்தாலும், டிரக்கியாஸ்டமி பொருத்தப்பட்டிருந்ததால் அவரால் பேச முடியாத நிலையில்தான் இருந்துள்ளார். ஆனால், அவரை சுற்றி நடப்பவை, அவரிடம் என்ன பேசுகிறார்கள் என்பதை உணரக் கூடியவராகவே அவர் இருந்துள்ளார்.
 
அந்நிலையில், ஜெ.விற்கு நெருக்கமான ஒருவர், டிசம்பர் 4ம் தேதி மாலை அவரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்து பொறுமையாக பேசியிருக்கிறார். ஆனால், அவர் கூறிய பெரும்பாலனவற்றிற்கு வேண்டாம் என ஜெயலலிதா தலையாட்டியுள்ளார். ஒரு கட்டதில், தன்னை ஜெ.வின் அரசியல் வாரிசாக அறிவிக்க வேண்டும் என அந்த நபர் கடுமையாக மிரட்டும் தொனியில் ஜெ.வை அதட்டியுள்ளார். 
 
அந்த நபரின் ஆவேசத்தை கண்ட ஜெயலலிதா, பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த நபர் ஏகத்துக்கும் கத்த, சப்தம் கேட்டு மருத்துவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் அங்கிருப்பது பற்றி கவலைப்படாமல், கோபமாக கத்தி பேசியுள்ளார் அந்த நபர். அப்போதுதான் ஜெ.விற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதன்பின்னரே, அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். எக்மோ கருதி பொறுத்தப்பட்டதால், 24 மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால், அந்த நிலையில் அவரின் உடல் உறுப்புகள் செயல் இழந்துவிட்டதால், அவர் மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா.?

இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு..!!

நிர்வாண படத்தை வெளியிடுவதாக கூறி மாணவி பாலியல் பலாத்காரம்..! டியூசன் ஆசிரியர் கைது..!!

மு. மேத்தா, பி சுசீலாவுக்கு முக்கிய விருது: தமிழக முதல்வர் அறிவிப்பு..!

துணை முதலமைச்சர் ஆவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.? ஜெயக்குமார் காட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments