Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனிமேல் அரசியல் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்: தீபா பேட்டி

Deepa

Mahendran

, சனி, 24 பிப்ரவரி 2024 (13:47 IST)
இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபா அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ஜெயலலிதா என்றும் அவர் இன்று இருந்திருந்தால் பலர் நன்மை அடைந்திருப்பார்கள் என்றும் அவரது இழப்பை இன்று நாடு நினைத்துப் பார்க்கிறது என்றும் தெரிவித்தார்.

அவரது நினைவாக இன்று குடும்பத்தினர் அனைவரும் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செய்தோம் என்றும் மேலும் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடந்தது என்றும் தெரிவித்தார்.

மேலும் மக்களவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தீபா, இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என்றும், அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்ததாகவும் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது ஆனால் இப்போதைக்கு அரசியல் செய்யும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

*மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை*