ராஜா உள்ளே மாதவன் வெளியே: தீபாவின் உள்ளே வெளியே அரசியல்!

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (13:13 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது கணவர் மாதவன் தான் ஆரம்பித்துள்ள ஜெ.தீபா பேரவையில் இல்லை எனவும், அவர் தனியாக கட்சி நடத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வந்தார். தொடக்கத்தில் அவருக்கு இருந்த ஆதரவும், வரவேற்பும் நாட்கள் செல்ல செல்ல அவரது செயல்பாடுகளால் வெகுவாக குறைந்துவிட்டது.
 
தீபாவின் அரசியல் செயல்பாடுகளுக்கு பின்னால் அவரது நண்பரும் டிரைவருமான ராஜா இருப்பதாக கூறப்படுகிறது. கணவர் மாதவனுக்கும், தீபாவுக்கும் இதனால் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர் தனியாக கட்சி ஆரம்பித்தார். பின்னர் சமாதானமாகி மீண்டும் தீபாவுடன் இணைந்தார்.
 
இந்நிலையில் திடீரென ஒருநாள் தீபா தனது பேரவையில் இருந்து ராஜாவை நீக்கம் செய்வதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆனால் தற்போது மீண்டும் தீபா ராஜாவை தனது பேரவையில் இணைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
டிரைவர் ராஜா மீண்டும் தீபா பேரவையில் வந்துள்ள இந்த சூழ்நிலையில் தீபா, தனது கணவர் மாதவன் தீபா பேரவையில் இல்லை எனவும், அவர் தனியாக கட்சி நடத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments